உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவந்திபுரம் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவந்திபுரம் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

கடலூர்:புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மூவலர் தேவநாத பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் முடிகாணிக்கை செய்து, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் ஸ்தானிகர் மிராசு நீலமேக பட்டாச்சாரியார், நரசிம்மன், நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், வெங்கடகிருஷ்ண பட்டர் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக கடலூரில் இருந்து திருவந்திபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.அதேப்போன்று திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கிருஷ்ணமூர்த்தி பட்டர், பிரபு, நரசிம்மன், நிர்வாக அதிகாரி நாகராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !