உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்பு நாகம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

சுயம்பு நாகம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

மேட்டுப்பாளையம்: ஆலாங்கொம்பு சுயம்பு நாகம்மன் கோவில், கும்பாபிஷேக விழா நடந்தது. பவானி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து, விநாயகர் வழிபாட்டுடன் முதல்கால யாக வேள்வி துவங்கியது. பின்னர் கோபுரத்தில் கலசங்கள் நிறுவப்பட்டன. தெய்வத்திருமேனிகளை பீடத்தில் நிறுவி எண்வகை மருந்துகள் சாத்தப்பட்டன. அதிகாலை, 5:30 மணிக்கு மங்கள இசை முழங்க  திருக்கோவிலை புனிதநீர் ஊற்றி துாய்மை செய்யப்பட்டது. பின்னர் இரண்டாம் கால வேள்வியை தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு நாதஸ்வரம், மேளதாளங்கள், வாண வேடிக்கை முழங்க திருக்குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி பழனிசாமி, துணைத்தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல் ஆகிய இருவரும் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்;  தொடர்ந்து சுயம்பு நாகம்மனுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !