உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்க பூபதி கல்லூரியில் கோவில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீரங்க பூபதி கல்லூரியில் கோவில் கும்பாபிஷேக விழா

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லுாரி வளாகத்தில் குருவாயூரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லுாரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள குருவாயூரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், மூர்த்தி ஹோமம், 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், 10:00 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகமும் நடந்தது. விழாவிற்கு ஸ்ரீரங்க பூபதி கல்வி குழும தாளா ளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். இயக்குனர் சாந்தி பூபதி, சரண்யா ஸ்ரீபதி, கார்த்திகிருஷ்ணன், டாக்டர் சந்தியா கார்த்திகிருஷ்ணன், டாக்டர் ஷர்மிஸ்ரீ மற்றும் கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !