விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :3377 days ago
ஊத்துக்கோட்டை;விநாயகர் கோவில்களில் நடந்த சங்கடஹர சதுர்த்தி விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.ஊத்துக்கோட்டை, அண்ணாதுரை சிலை அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.மைலாப்பூர் கிராமத்தில் உள்ள, கண் திருஷ்டி விநாயகர் கோவிலிலும், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.