உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

மதுரை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

மதுரை: மதுரை மணி நகரம் ஹரே கிருஷ்ணா கோவிலில் இஸ்கான் பொன்விழா, கிருஷ்ணஜெயந்தி விழா நாளை நடக்கிறது. 1966ல் பக்தி வேதாந்த சுவாமி பிரபு பாதாவால் இஸ்கான் அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பால் நடத்தப்படும் ஹரேகிருஷ்ணா  கோவிலில், நாளை காலை 9:30 – மதியம் 12:30 மணி,  மாலை 5:30 – இரவு 9:30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். விழாவில்  ஹரே கிருஷ்ண மகா மந்திர ஜபம், ஹரி நாம சங்கீர்த்தனம், தீபாராதனை, அபிஷேகம், நைவேத்யம், ஜெயந்தி சிறப்பு அலங்காரம்  நடக்கும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !