வெள்ளத்தில் வாரணாசி: கட்டடங்களில் உடல்கள் தகனம்
வாரணாசி:உ.பி.,யில், புனித நகரங்களில் ஒன்றான, வாரணாசியில் உள்ள கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்,அதன் கரையில் பிணங்களை தகனம் செய்ய முடியாமல், அருகில் உள்ள கட்டடங்களில் தகனம் நடக்கிறது. வட மாநிலங்களில், பருவ மழை தீவிர மடைந்து உள்ளதால், பல நகரங்கள் வெள்ளத் தில் மிதக்கின்றன. சமாஜ்வாதியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆட்சி நடக்கும் உ.பி.,யில், வாரணாசி நகரில் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஹிந்துக்களின் புனித நகரான இங்கு இறந்தோர் உடல்கள், கங்கை நதிக் கரையோரம் தகனம் செய்யப்படுவது வழக்கம். வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், தகன மேடைகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. வேறு வழியின்றி,அருகில் உள்ள கட்டடங்களின் உச்சியில், மிகுந்த சிரமங்களுக்கு இடையே, உடல்கள் எரிக்கப்பட்டு தகனம் செய்யப்படுகின்றன.
அலகாபாத் நகரிலும்,கங்கை நதிக் கரையோரம், இறந்தவர் உடலை தகனம் செய்யும் பணி பாதிக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், அருகில், நெரிசல் மிக்க பகுதிகளில் உள்ள குறுகிய தெருக்களில், உடல்கள் தகனம் செய்யப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, உ.பி.,யிலும், பீஹாரிலும்,வெள்ளம் காரணமாக, 1.3 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளி யேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து உள்ளனர். இம்மாநிலங்களில் வெள்ளத்தில் சிக்கி, 30 பேர் பலியானதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமருடன் நிதிஷ் சந்திப்பு: ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த,பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், நேற்று டில்லியில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீஹாரில், வழக்கத்தை விடவும் குறைவான அளவே மழை பெய்துள்ளது. ஆனால், நேபாளத் தில் பெய்த கனமழையால், கங்கை ஆற்றில் வெள் ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் சேரும், சகதியும் நிரம்பி இருப்பதால் தான், தண்ணீர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கங்கையில் சேற்றையும், சகதியை யும் அள்ள வேண்டும்; கங்கையை துாய்மைப் படுத்தும் திட்டத்துடன் துார்வார வேண்டும். ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ள பாதிப்புக்கு, இதுதான் தீர்வு. பிரதமரிடம் இதை வலியுறுத்தி னேன்; நடவடிக்கை எடுப்பதாக, அவர் உறுதி யளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.