சுந்தரவதன கிருஷ்ணர் கோவிலில் 81ம் ஆண்டு ஜெயந்தி விழா!
புதுச்சேரி: பாரதி வீதியில் அமைந்துள்ள சுந்தரவதன கிருஷ்ணர் கோவிலில் 81ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பாரதி வீதியில் அமைந்துள்ள சுந்தரவதன கிருஷ்ணர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 81ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழாவாகும். இதையொட்டி நேற்று சுந்தர விநாயகர், பாவானி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று சுந்தர சுப்பிரமணியருக்கு மகா திருமஞ்சனமும், மகா தீபாராதனை நடக்கிறது. 25ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அன்று சுந்தரவதன கிருஷ்ணருக்கு சுதர்சன ஹோமம் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. அன்று இரவு சுந்தரவதன கிருஷ்ணருக்கு வெண்ணெய்தாழி அலங்காரத்தில் தீபாராதனை நடக்கிறது. வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு உறியடி உற்சவமும், சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.