சென்னிமலை முருகன் கோவில் தேரை தங்க ரதமாக மாற்ற கோரிக்கை!
ADDED :3376 days ago
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில், வேங்கை மர தேரையே, தங்க ரதமாக மாற்ற, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னிமலை மலை மீதுள்ள, பாலசுப்ரமணியர் சுவாமி கோயிலில், தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. பாடல் பெற்ற தலமான இங்கு, 16அடி உயரத்தில் வேங்கை மரத் தேர் உள்ளது. சென்னிமலை ஸ்ரீ முருகன் மங்கள வார விழாக்குழு சார்பில், ஒப்படைக்கப்பட்ட இந்த தேர், கடந்த, 2000ம் ஆண்டு அக்.,10ம் தேதி முதல் செவ்வாய்கிழமை தோறும், இழுக்கப்படுகிறது. இந்த வேங்கை மரத்தேரையே, தங்க ரதமாக மாற்ற, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி நடந்தால், தமிழகத்திலேயே மிக உயரமான தங்க ரதம் என்ற சிறப்பை பெறும். எனவே, வேங்கை மர திருத்தேரையே, தங்க ரதமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.