உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 5,100 விநாயகர் சிலை பிரதிஷ்டை!

5,100 விநாயகர் சிலை பிரதிஷ்டை!

திருப்பூர் ;இந்து முன்னணி சார்பில், மாவட்டம் முழுவதும், 5,100 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.விநாயகர் சதுர்த்தி, வரும் 5ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்து முன்னணி சார்பில், திருப்பூர் மாநகர பகுதிகளில், 820 சிலைகள் உட் பட, மாவட்டம் முழு வதும், 5,100 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.  இந்தாண்டு, பாகுபலி விநாயகர், ஐந்து தலை நாகத்தில் விநாயகர், பால விநாயகர், கமல விநாயகர், வனங்களை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், சிங்கம், மான், மாடுகளுடன் எழுந்தருளும் விநாயகர் என, 32 வடிவங்களுடன், மூன்றரை அடி முதல், 11 அடி உயரம் வரை, சிலைகள் தயாராகி வருகின்றன.

இந்து முன்னணி நிர்வாகிகள், வரும், 29ல், மாலை அணிந்து விரதம் துவக்கும் நிகழ்ச்சி, கோட்டை மாரியம்மன் கோவிலில் நடக்கிறது. செப்.,5ல், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜை நடைபெறும்.வரும், 6ல் குன்னத் தூர், வெள்ளக்கோவில், காங்கயம், குண்டடம், செஞ்சேரிமலை, கொடுவாய் பகுதிகளில், விசர்ஜன ஊர்வலம் நடைபெறும். 7ல், அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், மடத்துக்குளம் பகுதிகளிலும்; 8ல், திருப்பூரிலும் விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது.  திருப்பூரில், புதிய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு அரசு மருத்துவமனை, கே.வி.ஆர்.,நகர் பகுதிகளில் இருந்து ஊர்வலம் துவங்கி, ஆலங்காடு வந்தடையும்; அங்கு, பொதுக்கூட்டம் நடைபெறும். மாநில தலைவர் சுப்ரமணியம் தலைமை வகிக்கிறார். பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா, இசையமைப்பாளர் கங்கை அமரன், மாநில செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.விழாவில், முதல்நாள் சமுதாய சமத்துவ தினம், 2வது நாள் அன்னையர் தினம், திருவிளக்கு பூஜை, 3வது நாள் இளைஞர் தினம், 4வது நாள், இந்து எழுச்சி தினம் ஆகியன கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !