ஹரே கிருஷ்ணா சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :3375 days ago
சென்னை: திருவான்மியூர், கிருஷ்ண, பலராமர் கோவில்களில், ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா, இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, திருவான்மியூர், வால்மீகி நகரில் உள்ள கிருஷ்ண, பலராமர் கோவில்களில், ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில், சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இன்று காலை, 9:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, புஷ்ப அர்ச்சனை சேவை நடக்கிறது. மாலை, 5:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை திருச்சூர் சகோதரர்களின் ஹரிநாம சங்கீதோற்சவம் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு கிருஷ்ண, பலராமருக்கு பஞ்சாமிருத குளியல் நடத்தப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் படுகின்றன.