செஞ்சி முருகன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :3375 days ago
செஞ்சி: செஞ்சி பி. ஏரிக்கரை முருகன் கோவிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது. செஞ்சி பி.ஏரிக்கரையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பி ரமணியர் கோவிலில், ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, 108 சங்கு, கலச பிரதிஷ்டை செய்து, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமமும், மகா பூர்ணாஹூதியும் நடந்தது. தொடந்து முருகப் பெருமானுக்கு 108 சங்காபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, விழா குழுவினர் ரமேஷ், குமரேசன், ஏழுமலை, சிவக்குமார், மதியழகன், கருணாநிதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.