கிருஷ்ண ஜெயந்தி மூணாறில் ஊர்வலம்
ADDED :3375 days ago
மூணாறு, கேரளாவில் கிருஷ்ணஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி மூணாறில் காளியம்மன், கிருஷ்ணன்,நவகிரக கோயில்கள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடந்தன. பழைய மூணாறில் உள்ள பார்வதியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் கண்ணன்,ராதை வேடத்தில் சிறுவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிந்ததுடன், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஊர்வலத்தில் கலந்துகொண்டார். ஊர்வலம் காளியம்மன், கிருஷ்ணன்,நவகிரக கோயிலை வந்தடைந்ததும், கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை,அபிஷேகங்கள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. உறியடிப் போட்டியில் சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் பங்கேற்று பானைகளை உடைத்தனர்.