உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிற்பக்கூடங்களில் பாகுபலி விநாயகர் சிலைகளுக்கு கிராக்கி!

சிற்பக்கூடங்களில் பாகுபலி விநாயகர் சிலைகளுக்கு கிராக்கி!

ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் சிற்பக்கூடங்களில், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள, பாகுபலி விநாயகர் சிலைகளுக்கு, இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஜலகண்டாபுரத்தில் உள்ள சிற்பக்கூடங்களில், பல்வேறு வித கோணங்களில் வடிவமைக்கப்பட்ட, 2,000க்கும் மேற்பட்ட சிலைகள், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதில், கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டில், புதிய கோணங்களில் வடிவமைக்கப்பட்ட சிலைகளுக்கு, இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கூடியுள்ளது. அதில், பாகுபலி விநாயகர் சிலைகளுக்கு கிடைத்துள்ள கூடுதல் வரவேற்பால், அந்த வகை சிலைகளுக்கு, கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. குறைந்த பட்சம், 100 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சிலைகள்விற்பனைக்குஉள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !