உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் தயார்!

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் தயார்!

திருப்பாச்சூர்: வரும் செப்., 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பாச்சூரில் விநாயகர் சிலைகள் வர்ணம் பூசப்பட்டு, விற்பனைக்கு த யார் நிலையில் உள்ளன.  விநாயகர் சதுர்த்தியை ஒட்டி,  சிலைகள் தயாரிக்கும் பணி, திருப்பாச்சூர் பகுதியில் தீவிரமாக நடந்து வந்தது.  இப் பகுதியில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி, சிலைகள் தயாரித்து வருகின்றனர். இதுகுறித்து, அவர்கள்  கூறுகையில், ‘நாங்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இப்பகுதியில் வந்து முகாமிட்டு, சிலைகள் தயாரித்து வருகிறோம்.  இங்கு  3 அடி முதல், 9 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் வரை தயாரித்துள்ளோம். நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படாத வகையில், விநாயகர் சி லைகளை கிழங்கு மாவு, தேங்காய் நார் மற்றும் காகித கரைசல் மூலம் செய்துள்ளோம்’ என்றனர். மேலும், ‘இதில், சிவன், பார்வதி விநாயகர், மயில்  வாகன விநாயகர் உட்பட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளோம்.  இந்தாண்டு விநாயகர் சி லைகளை, 2,000 ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளோம்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !