வேளாங்கண்ணி திருவிழா பக்தர்கள் பாதயாத்திரை
ADDED :3376 days ago
வடமதுரை, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவிற்காக, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானபக்தர்கள் வடமதுரை வழியே நடைபயணமாக சென்ற வண்ணம் உள்ளனர்.வேளாங்கண்ணியில் ஆக.29ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி, செப்.9 வரை நடக்கிறது. திருவிழாவிற்காக விரதமிருந்த பக்தர்கள் சிறு, சிறு குழுக்களாக வேளாங்கண்ணிக்கு நடைபயணம் நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
இவர்களுள் பலர் காவி வேட்டி அணிந்து, கொடி, சிலுவையை ஏந்தி, சப்பரம், தேர், சைக்கிள் ரிக் ஷா போன்றவற்றில் மாதா சிலையுடன் பக்தி பாடல்களை ஒலிபரப்பியவாறு செல்கின்றனர். காலையில் வெயில் தாக்கம் அதிகரிக்கும் வரை, மாலையில் வெயில் குறைந்தபின் துவங்கி நள்ளிரவு வரையும் பயணத்தை தொடர்கின்றனர்.