புதுச்சேரி கிருஷ்ணர் கோவிலில் சுதர்சன ஹோமம்
ADDED :3376 days ago
புதுச்சேரி: கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, பாரதி வீதி சுந்தரவதன கிருஷ்ணர் கோவிலில் சுதர்சன ஹோமம் நடந்தது. சுந்தரவதன கிருஷ்ணர் கோவிலில், 81ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. 24ம் தேதி சுந்தர சுப்பிரமணியருக்கு தி ருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. கிருஷ்ண ஜெயந்தியான நேற்று காலை சுந்தரவதன கிருஷ்ணருக்கு சுதர்சன ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து கிருஷ்ணருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து, மகா தீபாராதனை நடந்தது. அன்று இரவு சுந்தரவதன கிருஷ்ணருக்கு வெண்ணெய்தாழி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11:30 மணியளவில், வாசுதேவர்– தேவகி தம்பதிக்கு கண்ணபிரான் பிறக் கும் வைபவம் நடந்தது. இன்று (26ம் தேதி) மாலை 7:00 மணிக்கு உறியடி உற்சவமும், சுவாமி வீதியுலா நடக்கிறது.