உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலங்காநல்லூர் ராமகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

அலங்காநல்லூர் ராமகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

அலங்காநல்லுார், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு,அலங்காநல்லுார் புதுப்பட்டி ராமகிருஷ்ணன் கோயில், பாலமேடு வடக்கு தெரு யாதவர் தெருவில் உள்ள கிருஷ்ணன் கோயில் மூலவர் கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். கிருஷ்ண பக்த சபை சார்பில் பஜனை நடந்தது. வைரவநத்தம், பூதகுடி, பெரிய ஊர்சேரியில் பொங்கல் வைத்து சுண்டல் படைத்து வழிபாடு செய்தனர்.எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள், கிருஷ்ணர் வேட போட்டிகள், யோகா, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

தாளாளர் பொன் கருணாநிதி, நிர்வாகிகள் வரதராஜன், பொன் திரு மலைராஜன், பிரேமலதா, முதல்வர் ஆறுமுகசுந்தரி, பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ஷோபா நன்றி கூறினார்.* கோகுலாஷ்டமியை முன்னிட்டு, மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூமாதேவி ஸ்ரீநிவாச பெருமாளுக்கு காலையில் சிறப்பு பூஜைகளும், மாலையில் ஊஞ்சல் சேவையும் நடந்தது. வடுக பைரவருக்கு மாலையில் யாக பூஜைகள் முடிந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் மனைவியுடன் எழுந்தருளியுள்ள ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து சந்தனக்காப்பு அலங்காரமானது. ஹார்விபட்டி பாண்டு ரங்கன் ஹரி பஜனை கூடத்தில் உலகளந்த கண்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

* மதுரை தினமலர் அவென்யூ வி.கே.கே. பள்ளி விழா தாளாளர் கமலாதேவி முன்னிலையில் நடந்தது. முதல்வர் வள்ளியம்மை வரவேற்றார். ராதா கிருஷ்ணர் வேடமணிந்து மாணவர்கள் வந்தனர். கிருஷ்ணன் லீலைகள் பற்றி ஒருங்கிணைப்பாளர் சுமதி பேசினார். உடற்கல்வி ஆசிரியர் பால கிருஷ்ணன் இனிப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !