யோக நிஷ்டை கணபதி
ADDED :3397 days ago
கோவை, குனியமுத்தூரில் யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார் விநாயகப் பெருமான். சபரிமலை ஐயப்பன் போல், யோக பட்டம் தரித்து, இளஞ்சூரிய சிவப்பு நிறத்தோடு யோக நிஷ்டையில் அமர்ந்துள்ளார். வலது முன்கையில் அட்சமாலையும், பின்கையில் கரும்பும், இடது முன்கையில் யோக தண்டமும், பின்கையில் பாசக் கயிறும் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். குழந்தைப் பேறு, தடைபட்ட திருமணம், வேலை வாய்ப்பு கிடைக்க மற்றும் யோகா, தியானத்தில் சிறந்து விளங்க இந்த யோக விநாயகரை வழிபடுகின்றனர்.