உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி மாரியம்மன் கோவிலில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு!

தேவி மாரியம்மன் கோவிலில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு!

மந்தாரக்குப்பம்:  கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில் உள்ள கிருஷ்ணர் சுவாமிக்கு  வெண்ணெய் காப்பு சிறப்பு அலங்காரம் நடந்தது.  இதையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு, கிருஷ்ணர் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், மஞ்சள் ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அபிஷேகம், மாலை 7:00 மணிக்கு சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடந்தது. இதனை தொடர்ந்து துளசி மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !