ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருவீதியுலா!
ADDED :3361 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு புராணம் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தவுடன் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் சுதர்சன்பட்டரும், வடபத்ரசயனர் சன்னதியில் வேதபிரான் அனந்தராமகிருஷ்ணன் பட்டரும் கிருஷ்ணஜெயந்தி புராணம் படித்தனர்.
இரவு 12 மணிக்குமேல் கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து நேற்று இரவு 7 மணிக்குமேல் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள், ஆலிழைக்கண்ணன் மாடவீதிகள், ரதவீதிகள் வலம் வந்தனர். பின்னர் உறியடி , இரவு 9 மணிக்குமேல் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் ராமராஜா செய்திருந்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.