கடலுாரில் தயாராகும் ‘பாகுபலி’ விநாயகர்!
கடலுார்: கடலுார் முதுநகர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 5ம் தேதி, கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. கடலுார் முதுநகர், மணவெளி பகுதியில் 2 அடி முதல், 12 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது. கிழங்கு மாவு, காகித கூழ் ஆகியவற்றால் சிலைகள் செய்யப்படுகிறது. இது குறித்து, தொழிலாளர் ஒருவர் கூறுகை யில், ‘விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியை கடந்த ஏப்ரல் மாதம் துவங்கினோம். சிலைகளுக்கு வர்ணம் பூசாமல் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. சிலைகளுக்கு வியாபாரிகள் வர்ணம் பூசி விற்பனை செய்து விடுவார்கள். தற்போது, கடலுார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வாடிக்கைய õளர்களின் ரசனைக்கேற்ப தேவையான சிலைகள் வடிவமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 1ம் தேதி முதல், படிப்படியாக டெலி வரி செய்யப்படும். இந்தாண்டு புதுவரவாக விநாயகர் தன் தோளில் லிங்கத்தை சுமந்திருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாகுபலி விநாயகர் என பெயரிடப்பட்டுள்ளது’ என்றார்.