உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூலோகநாதர் கோவிலில் பஞ்சமூர்த்திகளுடன் பெருமாள் வீதியுலா!

பூலோகநாதர் கோவிலில் பஞ்சமூர்த்திகளுடன் பெருமாள் வீதியுலா!

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் பஞ்சமூர்த்திகளுடன் பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  நெல்லிக்குப்பத்தில் பழமையான புவனாம்பிகை சமேத பூலோகநாதர் கோவில் கும்பாபிஷேக 7ம் ஆண்டு பூர்த்தி விழாவையொட்டி, நேற்று காலை  108 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. பிறகு 108 சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. மாலை எந்த கோவிலிலும்  இல்லாத வகையில் பஞ்சமூர்த்திகளுடன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பிரசன்ன வெங்கடாஜலபதி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பூஜைகளை குமார், ஹரி குருக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !