வரதராஜப் பெருமாள் கோயிலில் உறியடி திருவிழா
ADDED :3363 days ago
எரியோடு: எரியோடு குரும்பபட்டி ஸ்ரீபெருந்தேவி நாயிகா சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி, கோகுல அஷ்டமி விழா நடந்தது. மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் கோயில் வளாகத்தின் முன்பாக மைதானத்தில் எழுந்த ருளினார். தொடர்ந்து உறியடி திருவிழா நடந்தது. எரியோடு, குரும்பபட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் பங்கேற்றனர். * மண்டபம் புதுார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம், பஜனை, பக்தி இன்னிசையும், எரியோடு திருஅருள் பேரவை தலைவர் ராமகிருஷ்ணன் குழுவினரின் ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. பின்னர் உறியடி நிகழ்ச்சி, நாமாவளிபாராயணம் தியானம், சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடந்தன.