சிருங்கேரி சாரதா பீட ெஜயந்தி விழா
ADDED :3363 days ago
வத்தலக்குண்டு, சிருங்கேரி சாரதா பீடம் சச்சிதானந்த பாரதி சாமி ஜெயந்தி விழா நடந்தது. சச்சிதானந்த பாரதி சாமி பிறந்தகண்ணாபட்டி தியான மண்டபத்தில் பாராயாணம், ஹோமம், சஹஸ்ர நாம பூஜைகள் நடந்தது. காசி விஸ்வநாதர் கோயிலில் சிவன், அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், பஜனை நடந்தது. சச்சிதானந்த பாரதி நினைவு டிரஸ்ட் செயலாளர் கிருஷ்ணன்முன்னிலையில் பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விஸ்வநாதன் சிவாச்சாரியார் செய்திருந்தார்.