உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

கடலுார் ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

கடலுார்: கடலுார், புதுப்பாளை யம், ராஜகோபால சுவாமி கோவிலில், நேற்று, கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்  அருள்பாலித்தார். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நேற்று முன்தினம், மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. நேற்று இரவு, ஸ்ரீதேவி பூமி தேவி சகிதமாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவந்திபுரம்:  திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, உறியடி உற்சவம் நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !