உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு

அன்னியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆர்.கே.பேட்டை:அன்னியம்மன் கோவில் மண்டலாபிஷேகம், நேற்று நிறைவு பெற்றது. இதையடுத்து, 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில், திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் இந்திரா நகர் பகுதியில், அன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சீரமைப்பு பணிகள் முடிந்து, கடந்த ஜூலை, 10ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.அதை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது; நிறைவு நாளான நேற்று காலை, 11:00 மணிக்கு, நவ கலச வேள்வி மற்றும், 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !