சீனிவாசா பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி விழா
ADDED :3363 days ago
உடுமலை: உடுமலை பெரியகடைவீதியில் ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத சீனிவாசா பெருமாள் கோவில் உள்ளது. நேற்று முதல் வரும் செப்., 4ம் தேதி வரை கண்ணபிராதன் அவதாரம், ஸ்ரீ ஜெயந்தி விழா நடக்கிறது. விழா நாட்களில், நாட்களில் தினசரி மாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை விதவிதமான கிருஷ்ண அலங்காரங்களும், திவ்ய பிரபந்த சேவா காலம் நைவேத்யம், தீபாராதனை நடக்கிறது. இன்று (27ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு தவழும் அலங்காரமும், நாளை வெண்ணை தாழி கண்ணன், 29ல் ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் அலங்காரமும் இடம்பெறுகின்றன. வரும் 30ம் தேதி காளிங்க நர்த்தன கண்ணன் அலங்காரம், 31ம் தேதி கோவர்த்தன கண்ணன், செப்., 1ம் தேதி கண்ணன் உறியடி உற்சவம், 2ம் தேதி புன்னை மரக்கண்ணன் அலங்காரமும் நடக்கின்றது. ஏற்பாடுகளை, ஸ்ரீ ராமானுஜா சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.