உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயிபாபா கோவில் கும்பாபிஷேகம்

சாயிபாபா கோவில் கும்பாபிஷேகம்

மாரண்டஹள்ளி: மாரண்டஹள்ளி இ.பி., காலனியில் உள்ள சாயிபாபா கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை, 2 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, நவகிரக சாந்தி ஹோமம், வாஸ்து ஹோமம், லட்சுமி, சரஸ்வதி, துர்கா ஹோமம், பைரவி வாராசி ஹோமம் நடந்தது. காலை, 8 மணி முதல், 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாயிபாபா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !