பிள்ளையார்பட்டியில் வெள்ளி வாகனத்தில் சுவாமி உலா!
ADDED :3348 days ago
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா ஆக.27 காலை கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, தினசரி இரவில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். நேற்று, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வெள்ளி வாகனத்தில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செப்.,4ல் காலையில் விநாயகர் திருத்தேர் எழுந்தருளலும், மாலையில் தேரோட்டமும் நடைபெறும். செப்.5 விநாயகர் சதுர்த்தியன்று காலையில் கோயில் திருக்குளத்தில், அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரியும், மதியம் முக்கூரணி மோதகம் படையலும்,இரவில் ஐம்பெரும் கடவுளர்கள் வாகனங்களில் திருவீதி வலம் வருதலும் நடைபெறும்.