திருப்பூர் சித்தி விநாயகர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு
திருப்பூர்: திருப்பூர், டவுன் எக்ஸ்டன்சன், ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா, சங்காபிஷேக விழா, நேற்று நடைபெற்றது.திருப்பூர், டவுன் எக்ஸ்டென்ஷன், 3வது வீதி, ஸ்ரீ சித்தி விநாயகர், மங்களாம்பிகை சமேத ஆதி கும்÷ஸ்வரர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா மற்றும் 108 வலம்புரி சங்காபிஷேக விழா, 28ல் துவங்கியது. நேற்று காலை, 5:00 மணிக்கு, விநாயகர் பூஜை, பஞ்ச கவ்ய வழிபாடு, மூலமந்தர யாகம் நடந்தது. அதன்பின், கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்த கலசங்கள் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் சுவாமிகளுக்கு, தீர்த்தாபிஷேகம் நடந்து, திரவ்ய யாகம், நிறை வேள்வி, உபசார வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது.காலை,11:00க்கு, ஸ்ரீ சித்தி விநாயகருக்கு, 16 வகை திரவியங்களில் அபிஷேகமும், 108 வலம்புரி சங்காபிஷேகம் ஆகியவை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, பிரதோஷ அபிஷேகம், வழிபாடு, சோடஷ உபசார பூஜை ஆகியன நடைபெற்றது. விழாவில், திருப்பணி, கும்பாபிஷேக உபயதாரர்கள், குழுவினருக்கு பாராட்டு விழா நடந்தது.