பாளை., ஆயிரத்தம்மன் கோயிலில் உழவாரப்பணி
ADDED :5173 days ago
திருநெல்வேலி:அகில உலக இருக்கன்குடி மாரியம்மன் அடியார் பக்த சேவை சார்பில் பாளை., ஆயிரத்தம்மன் கோயிலில் உழவாரப் பணி நடந்தது. இக் குழுவினர் ஆயிரத்தம்மன் கோயில் சுற்றுப்பிரகாரம், மேல்தளம், தரை தளம், கொடிமரம், நவராத்திரி கொழு மண்டபம் போன்றவற்றை சுத்தம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உழவாரப் பணியை மேற்கொண்டனர்.ஏற்பாடுகளை அகில உலக இருக்கன்குடி மாரியம்மன் அடியார் பக்த சேவை தலைவர் ராஜீவ்காந்தி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.