உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதா திருப்போரூர் முருகன் கோவில் ஓய்வுக்கூடம்?

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதா திருப்போரூர் முருகன் கோவில் ஓய்வுக்கூடம்?

திருப்போரூர்: திருப்போரூரில், பக்தர்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு, இன்னும் திறக்கப்படாமல் உள்ள பக்தர்கள் ஓய்வுக்கூடம் சமூக விரே  ாதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. காஞ்சிபுரம் மா வட்டம், திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, கி ருத்திகை, சஷ்டி மற்றும் உற்சவ நாட்கள், டுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் த ங்குவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும், கோவில் நிர்வாகத்தின் சார்பில், பல லட்சம் ரூபாய் மதிப்பில், நெமிலிகெனால் சாலையில், 2013- –  14ம் ஆண்டில் பக்தர்கள் ஓய்வுக்கூடம் கட்டப்பட்டு, பயன்பாடுக்கு வராமல் உள்ளது. இந்த கட்டடத்தின் அருகிலேயே, மற்றொரு ஓய்வுக்கூடமும்,  திருமண மண்டபமும் அரசு சார்பில், சிறப்புத் தன்னிறைவு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடங்களும், கட்டி முடிக்கப்பட்டு இரண்டு  ஆண்டுகள் ஆகியும், பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன. இவ்வாறு, பக்தர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட கட்டடங்கள், பல மாத ங்களாக  திறக்கப்படாமல் உள்ளதால், தற்போது இக்கட்டடங்கள் சமூகவிரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. இக்கட்டடங்களில் அமர்ந்து, மது அருந் துவது, சூதாடுவது என, பல்வேறு தகாத செயல்களில், சமூகவிரோதிகள் ஈடுபடுகின்றனர். மேலும், பல மாதங்களாக பயன்படுத்தாமல் உள்ள  இக்கட்டடங்கள், சிதிலமடைந்து வருகின்றன. பல லட்சம் ரூபாய் செலவில், பக்தர்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கட்டடங்கள், தற்போது ÷ வறு சில பயன்பாட்டிற்கு தான் பயன்படுகின்றன.

இதுகுறித்து,சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் எத்தனையோ முறை , முறையிட்டு பார்த்துவிட்டோம்; ஒன்றும் நடக்கவில்லை. இனிமேலும்,  இக்கட்டடங்கள் குறித்து ஒரு முடிவு வராவிட்டால், இது நிர்வாகத்தின் அலட்சிய போக்கையே காட்டுகிறது. -சமூக ஆர்வலர்கள் திருப்போரூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !