உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்வைலாமூர் மருதியம்மன் கோவில் தேர்திருவிழா

மேல்வைலாமூர் மருதியம்மன் கோவில் தேர்திருவிழா

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தாலுகா, மேல்வைலாமூர் மருதியம்மன் கோவில் தேர்திருவிழா, கடந்த 9ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 17ம் தேதி பால்குடம் எடுத்தலும், இரவு ஊஞ்சல் உற்சவமும், 26ம் தேதி மஞ்சள் நீராட்டும், மாலையில் படுகளமும், இரவு அம்மன் திருக்கல்யாணமும் நடந்தது. செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., மஸ்தான், முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று கூடி வடம் பிடித்து, தேரை இழுத்து ஊர்வலம் வந்தனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !