1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!
ADDED :3366 days ago
திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழகத்தில், ஒரு லட்சம் இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன, என, இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம் தெரிவித்தார். திண்டுக்கல்லில் நடந்த, நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தமிழகத்தில், செப்., 5ல், விநாயகர் சதுர்த்தி விழா நடக்க உள்ளது. இதையொட்டி, ‘கோவில் வருமானம், அரசிடம் இருப்பது ஏன் என்ற பொருளில், விநாயகர் ஊர்வலங்கள் நடக்க உள்ளன. தமிழகத்தில், ஒரு லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இந்த விழாவை, சமுதாய சமத்துவ நாளாகவும், இந்து எழுச்சி தினமாகவும் கொண்டாட உள்ளோம். விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க உள்ள சிறுவர்கள், இளைஞர்களின் வீடுகளுக்கே சென்று, போலீசார் மிரட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.