உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கோயிலில் ஆவணி தேரோட்டம்

திருச்செந்தூர் கோயிலில் ஆவணி தேரோட்டம்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் முருகன் கோயிலில், ஆவணி திருவிழாவில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்துாரில் ஆவணி திருவிழா ஆண்டு தோறும் நடக்கும். இந்தாண்டு ஆக., 22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்தாம் திருவிழாவான நேற்று காலை, 6.00 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை மாலை, மஞ்சள் நீராட்டு கோலத்தில் சுவாமியும் அம்பாளும் வீதியுலா வருகின்றனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன், மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !