உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளவனூர் சித்தர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா

வளவனூர் சித்தர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா

விழுப்புரம்: வளவனுார் மகா சித்தர் கோவிலில், மூன்று நாட்கள் திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. வளவனுார் குமாரபுரி சடராமன் தெருவில் உள்ள மகா சித்தர் கோவிலில், வரும் ௧௬ம் தேதி முதல் மூன்று நாட்கள் திருக்குட நன்னீராட்டு நிறைவு விழா நடக்கிறது. இதனையொட்டி, ௧௬ம் தேதி, வலம்புரி விநாயகர் மகா வேள்வி மற்றும் காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. மறுநாள் (௧௭ம் தேதி), மரக்கன்றுகள் நடும் விழா, மகா சித்தர் வேள்வி பூஜை, மகேஸ்வரர் பூஜை, அம்மையப்பர் திருமண வைபவம், மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, அம்மையப்பர், சாய்பாபா வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து ௧௮ம் தேதி சிறப்பு யோகா பயிற்சி, இலவச சித்த மருத்துவ முகாம், திருவிளக்கு பூஜை, சிறப்பு கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !