உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.14 லட்சம்

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.14 லட்சம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் உப கோயில்களிலுள்ள 35 உண்டியல்கள் நேற்று துணை கமிஷனர் செல்லத்துரை, உதவி கமிஷனர் அனிதா முன்னிலையில் எண்ணப்பட்டன. அதில் 14 லட்சத்து 63 ஆயிரத்து 415 ரூபாய், தங்கம் 175 கிராம், வெள்ளி ஒரு கிலோ 401 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், ஐயப்பா சேவா சங்கத்தினர், பாடசாலை மாணவர்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !