சென்னிமலை முருகன் கோவிலுக்கு புதிய செயல் அலுவலர்
ADDED :3666 days ago
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், நான்கு மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அதன் பின்பு புதிய அலுவலர் நியமிக்கவில்லை. கொடுமுடி கோவில் செயல் அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில் புதிய செயல் அலுவலராக, அருள்குமார் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று கொண்டார். இவர் இதற்கு முன், ஈரோடு, கொங்காலயம்மன் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வந்தார்.