உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் கோவிலை சுற்றி பக்தர்கள் வசதிக்காக கம்பளம் விரிப்பு

திருச்செந்துார் கோவிலை சுற்றி பக்தர்கள் வசதிக்காக கம்பளம் விரிப்பு

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தரிசனத்திற்கு பின், பிரகாரம் வரும் பக்தர்களின் பாதங்கள் வெயில் சூட்டில் பாதிக்காமல் இருக்க, அவர்கள் நடந்து செல்லும் பாதையில் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கோடை விடுமுறையில், தற்போது அளவுக்கு அதிகமான கூட்டம் உள்ளது. பக்தர்கள், தரிசனம் முடித்து, கோவிலின் வடபுறம் வள்ளி குகை பகுதி வழியாக வெளியே வருகின்றனர். அவர்கள் வெளியே வரும் பாதையில் இருந்து, 200 மீ., தொலைவிற்கு கூரை இல்லாத நிலை உள்ளது. கோவிலின் கீழ்பிரகாரம், தென்பிரகாரத்திலும் இதேபோல, 300 மீ., தொலைவிற்கு வெயில் சூட்டில் தான் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. காலை, 9:00 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாவதால், அந்த பகுதியில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு தரை சூடாகி, கால் சூட்டால் அவதிபடுகின்றனர். கோவில் நிர்வாகம் தரப்பில், பக்தர்களை வெயிலின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில், தென்னை நார் கம்பளங்களை விரித்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், ‘தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்களின் கால் சூட்டை குறைப்பதற்காக, கோவிலை சுற்றி, 600 மீ., நீளத்திற்கு தென்னை நார் கம்பளத்தை விரித்து உள்ளோம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, பாத சூடு இல்லாமல் அதில் நடக்கின்றனர். வெயில் அதிகரிப்பு நேரத்தில், அந்த கம்பளத்தில் தண்ணீர் ஊற்றி நனைக்கிறோம்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !