வத்தலக்குண்டில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்
ADDED :165 days ago
வத்தலக்குண்டு: மேலமந்தை பாலவிநாயகர் கோயிலில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என தனித்தனி சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோயிலில் நடந்த யாக வேள்வி பூஜையை தொடர்ந்து மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற பெண்களுக்கு திருமாங்கல்ய கயிறு, வளையல்கள் வழங்கப்பட்டன. பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.