வித்தியாச விநாயகர்கள்!
ADDED :3342 days ago
நெல்லை மாவட்டம், மேகலிங்கபுரத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் உள்ளது. தஞ்சை மாவட்டம், திருவலஞ்சுழியில் சுவேத விநாயகர் ஒன்பது அங்குல உயரமே உள்ளார். தஞ்சை, திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோயிலில் பிரளயம்காத்த விநாயகர், விநாயக சதுர்த்தி அன்று செய்யப்படும் அபிஷேகத் தேனை உறிஞ்சிவிடுகிறார். சீர்காழி - திருமணிக்கூடம் விநாயகருக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் சிரத்துள் இறங்கி விடுகிறது. திருவாரூர் மாவட்டம், ராமநாதர் கோயிலில் மனித முகத்துடன் நரமுக விநாயகர் காட்சி தருகிறார். கேரளம், கோட்டயம் மள்ளியூர் கணபதி கோயிலில் விநாயகர் மடியில் கண்ணன் அமர்ந்திருக்கிறார்.