பூமாலையப்பர் கோவில் தீமிதி திருவிழா!
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த குமாரை பூமாலையப்பர், பச்சையம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திட்டக்குடி அடுத்த குமாரையில் உள்ள பூமாலையப்பர், பச்சையம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. அறநிலையத்துறை மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் வினாயகர், பச்சையம்மன், சித்தநாதசுவாமி, பூமாலையப்பர் சுவாமிகளுக்கு புதிய திருத்தேர் செய்யப்பட்டு கடந்த 28ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது. இதையடுத்து தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குலதெய்வ வழிபாடுசெய்வோர் குழுமி தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாலை நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அய்யப்ப சேவாசங்கம் மற்றும் குலதெய்வ வழிபாடு மன்றத்தினர், பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.