உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகரின் வாகனங்கள்!

விநாயகரின் வாகனங்கள்!

சேலம், ஆத்தூர் வாகனப் பிள்ளையார் கோயிலில் இரு சிறு மூஞ்சூறுடன், பெரிய மூஞ்சூறும் உள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரு வைத்தியநாதர் கோயில் விநாயகர் குதிரை வாகனத்தில் வீற்றிருக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் விநாயகர் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். திருவாரூர், மூலாதார கணபதி ஐந்து தலை பாம்பு சுருண்டு கிடக்க, அதன் தலைமேல் விரிந்த தாமரையில் நடனம் புரியும் கோலத்தில் காட்சி தருகிறார். கோவை, அமணேஸ்வரர் கோயிலில் மூஞ்சூறு மீது நடனமிடும் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !