உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயக்கன்பேட்டையில் உறியடி உற்சவம் ‘ஜோர்’

நாயக்கன்பேட்டையில் உறியடி உற்சவம் ‘ஜோர்’

நாயக்கன்பேட்டை: நாயக்கன்பேட்டை ருக்மணி சத்யபாமா சமேத, வேணுகோபாலன் சுவாமி கோவிலில், உறியடி உற்சவம் கோலாகலமாக நடந் தது. வாலாஜாபாத் அடுத்த நாயக்கன் பேட்டை கிராமத்தில், ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்,  ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு உறியடி உற்சவம் நடைபெறும். நடப்பாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு,  நேற்று முன் தினம் காலை, 8:00 மணிக்கு வேணுகோபாலனுக்கு,சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மாலை, 5:30 மணிக்கு, வேணுகோபால சுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு, 7:00 மணிக்கு உறியடி உற்சவம் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல்; 8:00 மணிக்கு சுவாமி  வீதி உலா மற்றும் வாண வேடிக்கை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !