உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரியை முன்னிட்டு காலடியில் கல்விக்கான யாகம் தொடக்கம்!

நவராத்திரியை முன்னிட்டு காலடியில் கல்விக்கான யாகம் தொடக்கம்!

ஆதிசங்கரரின் குலதெய்வமான காலடி ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு இன்று (செப்.28) முதல் அக்டோபர் 6ம் தேதி வரை கல்விச்செல்வத்தை தரக்கூடிய ஸ்ரீவித்யா ராஜகோபால யாகம் நடைபெறுகிறது. இந்த யாகம் கோயிலின் மூலவரான ஸ்ரீகிருஷ்ணர் முன்பாக உள்ள நமஸ்கார மண்டபத்தில் வேதவிற்ப்பன்னர்கள் மற்றும் பிரபல ஜோதிடர்களால் நடத்தப்படுகிறது. நவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் இந்த யாகம் விஜயதசமி அன்று நிறைவடைகிறது. இந்த நாட்களில் வெள்ளியினால் செய்யப்பட்ட  ரூ1001 மதிப்புள்ள தாயத்து, 2001 மதிப்புள்ள டாலரும், தங்கத்தினால் செய்யப்பட்ட ரூ.8001 மதிப்புள்ள தாயத்து, 15001 மதிப்புள்ள டாலரும் வைத்து சுமார் 10, 008 முறை வித்யா ராஜகோபால மந்திரம் சொல்லி யாகம் செய்யப்படுகிறது. இந்த தாயத்து மற்றும் டாலரை பிரசாதமாக பெற விரும்பும் மாணவர்கள் தங்களது ஜாதகத்தை ஜெராக்ஸ் எடுத்து பணத்தை டி.டி. அல்லது செக்குடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  ஜாதக கோளாறினால் ஏற்படும் புத்தி மந்தம், ஞாபகசக்தி குறைவு,  படிப்பில் கவனமின்மை, சோம்பல், ஆசிரியர்களிடம் மரியாதைக்குறைவு, கெட்ட நண்பர்கள், வேலையின்மை, எழுதும் தேர்வுகளின் தோல்வி ஆகிய பிரச்சனைகள் நிவர்த்தியாவதற்கு பூஜை செய்யப்பட்ட இந்த தாயத்து மற்றும் டாலரை  அணிந்து கொண்டால் அனைத்திலும் வெற்றி நிச்சயம். இந்த தாயத்து மற்றும் டாலரை  அணிந்து கொள்ளும் மாணவர்கள் 41 நாட்கள் தினமும் 21 முறை ஸ்ரீ வித்யா ராஜகோபால மந்திரத்தை ஜபித்து வந்தால் வாழ்வில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களின் கல்வி, ஞானம் ஆகியவை வளர்ச்சி அடைவதுடன் தேர்விலும் சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

இது தவிர கையில் கட்டக்கூடிய ரøக்ஷக்கயிறு மற்றும் புத்தகப்பையில் வைத்துக் கொள்ளக்கூடிய ஸ்ரீவித்யா யந்திரம் ஆகியவற்றை பெற விரும்பும் மாணவர்கள் தங்களது பெயர் மற்றும் நட்சத்திரத்துடன் ரூ.51ஐ அனுப்ப வேண்டும். மாணவர்கள் யந்திரத்தில் உள்ள வித்யா ராஜகோபால மந்திரத்தை தினமும் 7 முறை சொல்வது கல்வி வளர்ச்சியைப் பெருக்கும். மாணவர்கள் தங்கள் ஞாபசக்தியைப் பெருக்கி கொள்வதற்காக ரூ.201ஐ அனுப்பினால் வித்யா கோபால கிருதம் என்ற சிறப்பான லேகியம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை தினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் அளவில் வித்யகோபால மந்திரத்தை சொல்லி சாப்பிட வேண்டும். இந்த காலகட்டத்தில் சைவ உணவு சாப்பிடுவது நல்லது. போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெருவதற்கும் இது மிகச்சிறந்த மருந்து.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: காப்பிள்ளி ஸ்ரீகுமார் நம்பூதரி,மேனேஜிங் டிரஸ்டி,ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்,காலடி (போஸ்ட்) -683 574, எர்ணாகுளம் மாவட்டம் கேரளா. போன்: 093888 62321, 093870 64321.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !