100 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
அன்னுார்: சொக்கம்பாளையத்தில், 100 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா இன்று (3ம் தேதி) துவங்குகிறது. காலையில் தீர்த்தக்குடம் எடுத்து வருதல், திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. நாளை காலையில் இரண்டாம் கால வேள்வி, விமான கலசம் நிறுவுதல், மாலையில் மூன்றாம் கால வேள்வி, எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. 5ல் காலை நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 9:30 மணிக்கு விமானங்களுக்கும்,மும்மூர்த்திகளுக்கும், திருக்குட நன்னீராட்டு நடக்கிறது. மதியம் காரமடை, தாசபளஞ்சிக திருப்பாவை பஜனை குழுவின் பஜனை, பிருந்தாவனம் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் சுவாதி திருவீதியுலா நடக்கிறது. பேரூர் மணிவாசகர் மன்றத்தினர் தமிழ்முறைப்படி, வேள்வி பூஜை செய்கின்றனர்.