விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :3355 days ago
ஊத்துக்கோட்டை: பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட, விநாயகர் மற்றும் நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடைபெற உள்ளது.எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அடுத்த, அம்மனம்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ளது, விநாயகர் மற்றும் நாகாத்தம்மன் கோவில். பழமைவாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டதால், விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவதில், சங்கடங்கள் உருவாயின.இதனால், பக்தர்கள் பங்களிப்புடன் கோவில் சீரமைக்கும் பணி துவங்கப்பட்டது. தற்போது, திருப்பணி முடிந்து, நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம், காலை, 7:30 மணிக்கு, புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.