உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பால் வடியும் வேப்பமரம்

பால் வடியும் வேப்பமரம்

பவானி: பவானி அருகே, தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த வேப்பமரத்தில் பால் வடிந்தது. அதைக்கண்டு பள்ளி ஆசிரியர்கள் வேப்ப மரத்துக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வழிபட்டனர். பவானி, அம்மாபேட்டை யூனியனுக்கு உட்பட்ட, பூனாட்சியில் உள்ள, எஸ்.ஈ.டி., மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் பல வகையான மரங்கள் உள்ளன. இதில், ஒரு வேப்ப மரத்தில், நேற்று முன்தினம், பால் வடியத் தொடங்கியது. அதைக்கண்டு, பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் வேப்ப மரத்திற்கு மஞ்சள் துணி கட்டி, மஞ்சள், குங்குமம் இட்டு, விளக்கேற்றி தினமும் காலை, மாலை என இரு வேலையும் பூஜை செய்து பயபக்தியுடன் வழிபாடு செய்கின்றனர். அப்பகுதி மக்களும், பால் வடியும் வேப்ப மரத்தைக் காண, கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !