உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

பரமக்குடி: பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார கோயில், வீடுகள் மற்றும் தெருக்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதன்படி பரமக்குடி கல்பட்டறை சித்தி விநாகர் கோயிலில் 36 வகையான சிறப்பு அபிஷேகம், வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. சுந்தரராஜப் பெருமாள், ஆஞ்சநேயர், கோதண்டராமசாமி, ஈஸ்வரன் கோயில், மீனாட்சி அம்மன், முத்தாலம்மன் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இந்து முன்னணி சார்பில், சிங்கம், யானை, மூசிக வாகனங்களில் அமர்ந்த நிலையில் 5 அடி முதல் 12 அடி உயர விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இங்கு தொடர்ந்து காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பரமக்குடி காய்கறி மார்க்கெட், சின்னக்கடைத் தெருவில் களிமண்ணில் விநாயகர் சிலைகள் செய்து ரூ.20 முதல் 100 வரை விற்றனர். இன்று மாலை 5 மணிக்கு இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !