உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா

தேவகோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா

தேவகோட்டை: தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூஷிக வாகனத்தில் சுவாமி வீதி உலா சென்றார். கலங்காது கண்ட விநாயகர் கோயிலில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. நேற்று சிலம்பணி ஊருணியில் தீர்த்தவாரியும், மாலையில் புஷ்பபல்லக்கு ஊர்வலமும் நடந்தன. கருதாவூருணி கரை கைலாசவிநாயகர் கோயிலில் நேற்று கணபதிஹோமம், சிறப்பு அபிஷேகம் நடந்தன. தொடர்நது விநாயகருக்கு தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நகர சிவன்கோயிலில் மரகத விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஜெயங்கொண்டவிநாயகர் கோயிலில் கணபதிஹோமம், 108 சங்காபிஷேகம் நடந்தன. மாலையில் சிறப்பு அலங்காரம் நடந்தது. கைலாசநாதர் கோயிலில் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராம்நகர் கவுரிவிநாயகர் கோயிலில் சிறப்பு அலங்காரம் நடந்தது. பாவனக்கோட்டை கல்யாணசுந்தரம் விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !